பக்கம்:பாடுங்குயில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நேரம்.

நினைவுடன் வாழ்வது சிலவேளை - கனவில்

நீந்திடப் போவது பலவேளை

முனைவுடன் வாழ்வது சிலவேளை - துயரம்

மூழ்கிடத் தாழ்வது பலவேளை

நட்பில் திளைப்பது சிலவேளை - தனியே

நலிந்து கிடப்பது பலவேளை

கற்பில்* களிப்பது சிலவேளை - துயரங்

கண்டு களிப்பது பலவேளை

சிரிப்பினில் வாழ்வது சிலபோது - கண்ணிர்

சிந்தித் தேய்வது பலபோது --

நெருப்பினில் காய்வது பலபோது - இன்பம்

நெஞ்சினில் தோய்வது சிலபோது

நல்லன. காண்பது சிலபோது - நாட்டில்

நாணயங் காண்பதுஞ் சிலபோது

அல்லன தோன்றுதல் பலபோது - மண்ணில்

அல்லலுந் தோன்றுதல் பலபோது

கற்பில் -

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/20&oldid=593889" இலிருந்து மீள்விக்கப்பட்டது