பக்கம்:பாடுங்குயில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயென எதிலும் அமரேன் - நறுமலர்

எதுவோ அதையே நுகர்வேன்

வாயினில் வந்ததை உளறேன் - துன்பம்

வாய்த்திடின் அதனுல் தளரேன்

வாழ்வினைப் பெரிதாக் கருதேன் - என்றும்

வாய்மையை மீறித் திரியேன்

தாழ்விலுஞ் செம்மைக் குரியேன் - என்றன்

தாயகங் காக்குங் குறியேன்

விண்மிசை யாண்டுந் திரிவேன் - அங்கே

விந்தைகள் ஆயிரம் புரிவேன்

மண்மிசை என்றும் வருவேன் - இன்பம்

மாநிலம் எய்திடத் தருவேன்

பாடிடு வேன்புது வுலகை - அங்கே

படைத்திடு வேன்பொது வுடைமை

சாடிடு வேன்வரும் படையைத் - தாக்கிச்

சமர்புரி வேன்.அது கடமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/19&oldid=593888" இலிருந்து மீள்விக்கப்பட்டது