பக்கம்:பாடுங்குயில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிக் கொடுக்கலாமோ?

ః:

காட்டிக் கொடுக்க லாமோ-நாட்டைக் காட்டிக் கொடுக்க லாமோ?-மா8ல

சூட்டி யழைக்க லாமோ-பகையைச்

சூழ்ந்து பிழைக்க லாமோ?

வீட்டைக் கெடுக்க லாமோ-உள்ளே வேட்டை தொடுக்க லாமோ-இங்கே

தேட்டை யடிக்க லாமோ-கெட்ட

சேட்டை பிடிக்க லாமோ?

நாடித் திரிய லாமோ-பிறனே

நத்தி அலைய லாமோ-அடிமை

தேடிக் கொடுக்க லாமோ-நாட்டைத்

தீயர் பிடிக்க லாமோ?

கூடி விளக்க லாமே-நமக்குள் கொள்கை முழக்க லாமே

தேடிக் கொடுக்க லாமே-அதனைச்

சேர்ந்து முடிக்க லாமே

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/28&oldid=593897" இலிருந்து மீள்விக்கப்பட்டது