பக்கம்:பாடுங்குயில்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயைப் பழிக்க லாமோ-பகைக்குத்

தாழ்ந்து பிழைக்க லாமோ-இழிந்த

நாயை நிகர்க்க லாமோ-ஈன்ற

நன்றி மறக்க லாமோ?

காலைப் பிடிக்க லாமோ-பகைக்கு

வாலைக் குழைக்க லாமோ-கையில்

வேலைக் கொடுக்க லாமோ-நமது

வேலை கெடுக்க லாமோ?

பற்றை விடுக்க லாமோ-நாட்டின்

பண்பைக் கெடுக்க லாமோ-பகையைச்

கற்றி நொறுக்க வாவா-பகைவர்

சூழ்ச்சி விரட்ட வாவா

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/29&oldid=593898" இலிருந்து மீள்விக்கப்பட்டது