பக்கம்:பாடுங்குயில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாளுெரு குழந்தை

, 8:16 クラノ

ஆத * వౌ

குடும்பம் எனக்கோர் நடைவண்டி-நல்ல கொள்கை வெறிதான் தொடர்வண்டி

இடும்பை தவிர்த்திடும் முப்பாலே-என்?ன

இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம்

ஆயும் மொழியே சிறுகோலி-அதனை

அறிவால் தெறிப்பேன் குழிகோலி

பாயும் குழியோ கவியாகும்-ஆடல்

பார்த்து மகிழ்வது புவியாகும்

பாமலர் என்றன் மழலைமொழி-பாட்டில்

பாவும் பொருளே குவளைவிழி

மாமழை வானந் தவழும்வழி-அங்கே

மதியம் உருள்பந் தெனதுவழி

காவியம் என்றன் மணல்வீடு-பொங்கும்

கற்பனை யதுதான் சிறுசோறு

வாவினி அம்மா மகிழ்வோடு-நெஞ்சின்

வாழை விரிப்பேன் பரிவோடு

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/42&oldid=593910" இலிருந்து மீள்விக்கப்பட்டது