பக்கம்:பாடுங்குயில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் குரல்

கவிஞனைப் பித்தனென்றும், பிழைக்கத் தெரியாதவ னென்றும் உலகம் பேசுவது செவியில் விழத்தான் செய்கிறது. கவிஞன், தான் என்ற எண்ண மற்றவன். தனக்கு என்ற ஆசையற்றவன். சுருங்கக் கூறின் தன்னை மறந்தவன். ஆதலின் அவன் செயல், அவன் பேச்சு, அவன் போக்கு, அவன் பார்வை அனைத்தும் ஏனைய மாந்தரினும் மாறுபட்டுத் தோன்றும். மாறுபட்ட இக் காட்சி யால் அவன் பித்தளுகிருன்; பிழைக்கத் தெரியாத வனும் ஆகிருன். அவன் உலகமே தனி உலகம்!

இயற்கை எழில் காணுங்கால் இன்பம் பெறு கிருன். மற்றவர் துயரப்படுங்கால் துன்பமடை கிருன். கொடுமைகள் காணும்பொழுதெல்லாம் குமுறி எழுகிருன் . இவ்வாறு இன்பம். துன்பம், குமுறல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு பொங்கியெழும் அவ்வுணர்ச்சிகளை வெளிக் காட்டக் குரல் கொடுக்கிருன். அக்குரல் தான் கவிதையென்று உலகத்தாற் கொண்டாடப் பெறு

கின் ДID 35J -

உலகச் சூழ்நிலைகள், அவனுடைய உள்ளுணர்ச்சி களைக் கிளறிவிட்டு, நெஞ்சத்திலே சொந்த வளிப்புகளை அலைமோத விட்டு, அவனைப் புலம்ப விடுகின்றன. அந்தப் புலம்பலைக் கேட்டு உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/5&oldid=593875" இலிருந்து மீள்விக்கப்பட்டது