பக்கம்:பாடுங்குயில்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவிடம் நீங்கள் செல்லுங்கால்-செய்யும்

புன்செயல் யாவுந் தள்ளுங்கள்

எதுசரி என்றே சொல்லுங்கள்-பின்னர்

எவ்வழி நன்ருே செல்லுங்கள்

சாதியின் வேரை வெட்டுங்கள்-நெஞ்சில்

சமநிலைப் பண்பை ஒட்டுங்கள்

மேதினி எல்ல ஞ் சற்றுங்கள்-அங்கே மேன்மைகள் கண்டே பற்றுங்கள்

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள்-போக்க

வழிவகை கண்டே கொள்ளுங்கள்

தாழ்ச்சிகள் எல்லாந் தள்ளுங்கள்-சோம்பித்

தளர்வதை நீங் கள் எள்ளுங்கள்

மொழி பல கற்கச் செல்லுங்கள்-ஆல்ை முக்தமிழ் உயிராச் சொல்லுங்கள்

இழிசெயல் சாய்த்தே வெல்லுங்கள்-நாட்டில்

எழில்வளங் காண நில்லுங்கள்

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/55&oldid=593923" இலிருந்து மீள்விக்கப்பட்டது