பக்கம்:பாடுங்குயில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்களே கேளுங்கள்

శs

/22-a-フマノ

இளையவரே ஒன்று கேளுங்கள்-சொல்லும்

என்மொழி கேட்டே வாழுங்கள்

பழகிட என்முன் வாருங்கள்-நல்ல

பண்புடன் நீர்முன் னேறுங்கள்

கலைகளைக் கற்றே தேருங்கள்-அங்கே

கற்பதை வாழ்விற் சேருங்கள்

நிலைகளை இங்கே பாருங்கள்-கையை

நெஞ்சினில் வைத்தே கூறுங்கள்

அரசியற் பாடம் போற்றுங்கள்-போற்றி

அறிவினை நெஞ்சில் ஏற்றுங்கள் அரசியற் போரில் நாட்டங்கள்-செல்லின்

அய்யோ சூழும் வாட்டங்கள்

உடைகளைச் சற்றே மாற்றுங்கள்-நாட்டின் உடைமைகள் எல்லாம் போற்றுங்கள்

கடமையைச் செய்தே காட்டுங்கள்-கெட்ட

கயமையைத் துரவென் ருேட்டுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/54&oldid=593922" இலிருந்து மீள்விக்கப்பட்டது