பக்கம்:பாடுங்குயில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறு முன்னேறு 今〜1のークご

இதே

சங்

உழைப்புக்கு நல்லதோர் காலம்-வந்தால்

ஓங்கிவ ளர்ந்திடு மேயிந்த ஞாலம்

பிழைப்புக்குப் போடாதே தாளம்-சென்று

பின்பாட்டுக் கூட்டத்தில் பாடாதே மேலும்

தன் மானம் ஒன்றையே நாடு-பெற்ற

தாயகந் தானுனக் கெப்போதும் வீடு எந்நாளும் பாட்டாளி யோடு-கூடி

எங்கெங்குந் தோளேற்றிப் படவேண்டும் பாடு

எங்கெங்குக் காணினுந் தேம்பல்-மக்கள்

எவ்வெவர் வாழ்விலும் இன்பங்கள் கூம்பல் பொங்கிப்ப டர்ந்திடும் சோம்பல்-கொண்டு

போற்றிவ ளர்த்ததால் வந்ததித் தீம்பு

சோம்பலை மாய்த்திடல் வேண்டும்-நின்றன்

தோளில் உழைப்பினைச் சேர்த்திடல் வேண்டும்

மாம்பழக் கொட்டையைத் தோண்டி-தட்டு

மாஞ்செடி தந்திடும் மந்திரம் வேண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/60&oldid=593928" இலிருந்து மீள்விக்கப்பட்டது