பக்கம்:பாடுங்குயில்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர் தந்த பாடம்

ダー"zー乙%。

அரும்பிச் சிரிக்குஞ் சிறுமலரே-நெஞ்சை

அள்ளிக் கவரும் எழிலுருவே

விரும்பிக் கிடக்கும் எனதுளமே-நின்பால்

வீசும் மணமும் நுகர்வுறவே

இதழை விரித்தே நகைபுரிவாய்-வண்டோ | ஏழிசை பாடச் சுவைதருவாய்

புதுமைப் பொலிவால் நலந்தருவாய்-மாதர்

போற்றிப் புகழும் நிலைபெறுவாய்

விரியும் இதழில் சிறுபணிகள்-காலை வீழும் பொழுதில் பெறுமழகு பரிதிக் கதிரால் மெருகுபெற-நின்னைப்

பார்த்துக் களிப்பேன் இருவிழியால்

உருவாய் வருங்கால் அரும்பென்பார்-நின்றன்

உடலோ பருத்தால் போதென்பார் சிறிதே விரிந்தால் மலரென்பார்-கீழே

சிதறி விழுந்தால் வீ என்பார்

4.

வி- வாடி விழும் மலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/62&oldid=593931" இலிருந்து மீள்விக்கப்பட்டது