பக்கம்:பாடுங்குயில்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமைகள் செய்வாய் செய்தவை எல்லாம் கரவா துரைப்பாய் அதுதான் நலந்தருமே நயமுடன் உண்மை நவின்றன என்றே நாடுனைப் போற்றும் அதல்ை விளம்பரமே

சொல்லையும் செயலையும் ஒப்பிடத் தெரிந்தவர் சொல்லவும் மாட்டார் அதல்ை முழங்கிடுவாய்

களிமயக் குறுவாய் கன்னியர் நுகர்வாய் கடவுளின் பேரைக் கலந்தால் போதுமடா எளியவர் மாந்தர் எதனையும் ஒரார் எது நீ சொலினும் அதுதான் வேத மடா

மடமையில் மூழ்கி மதியை மறந்தவர் வாழ்தலி லுைனை உலகே சூழுமடா

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/91&oldid=593966" இலிருந்து மீள்விக்கப்பட்டது