பக்கம்:பாடுங்குயில்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம்போல் விளையாடு

3 ο //-) ή 7 έ:

வந்ததை எழுது கண்டதை உளறு வளரும் புதுமையில் அதுதான் பாடலடா சந்தையில் இலக்கணம் சரிவரத் தெரிந்தவர் தவறியும் இல்லை அதனல் ஏடெடுநீ

தெரிந்தவ ரிருப்பினும் தென்புடன் எழுந்தே செப்பிட மாட்டார் அதல்ை பாடிடுநீ

புகழ்வாய் ஒருநாள் இகழ்வாய் மறுநாள் புண்படப் பாடுக அதுதான் பொருள்தருமாம் இகழினும் புகழினும் இருகை ஒலியால் ஏற்பவர் மிகப்பலர் அதல்ை புகழ்பெறுவாய்

பண்புகள் உணர்ந்தவர் பார்தனில் அருகினர் பயப்பட வேண்டாம் அதனல் கவிதருவாய்

முதல்நாள் ஒன்றும் மறுநாள் ஒன்றும்

முரண்படப் பேசுக அதுதான் அரசியலாம் இதுதான் முறையா எனவுனக் கேட்டால் இதுவே அரசியல் என்றே உரைசெயலாம்

ஏனெனில் அரசியல் தெரிந்தவர் இல்ஜல இருப்பினும் துணியார் எனவே பறையறைவாய்

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/90&oldid=593964" இலிருந்து மீள்விக்கப்பட்டது