பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 99 மற்ருே.ரிடத்தில் இவர். ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு உவப்புடன் ஈவேன் என்று பாடுகின்ருர் . இறுதிநாள் தமிழே வடிவமான பாவேந்தர் சிலர் சொல்லை நம்பித் தமது பாண்டியன் பரிசு என்னும் காப்பி யத்தைத் திரைப்படமாக்கக் கருதிச் சென்னைக்குச் சென்று, பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி, 21-4-1964இல் நம்மை விட்டுப் பிரிந்தார். கண்க சுப்புரத்தினம், பாரதிதாசனகி, பிறகு புரட்சிக் கவிஞராகி, முடிவில் பாவேந்தராகித் தம் புகழ் நிறுத்தித் தாம் மறைந்துவிட்டார். அவர்தம் பிரிவால் வாடிய தமிழ்மக்களுக்கு, அவருடைய பாடலே ஆறுதல் தந்தது. ஆறுதல் தந்த அந்த மொழி, தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவ தில்லை என்பதே.