பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாடுங் குயில்கள் தார்; விடியற்காலையே வந்துவிட்டார். நிகழ்ச்சி மாலையில்தான். அதுவரை இவர் ஒர் அறையில் ஒரு பலகையில் படுத்துக்கொண்டார். தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல், கையை மடக்கித் தலைக் கடியில் வைத்தவண்ணம் படுத்திருந்தார். இவரைக் காண வந்தவர்களிடம், கல்லூரி யில் யாருமே தம்மைக் கவனிக்கவில்லை என்று இவர் வருத்தப்பட்டுக்கொண்டார். பாவேந்தருக்கு அருகில் ஒரு பெட்டியும், அதன்மேல் தலையணையுடன் கூடிய படுக்கையும் இருப்பதை வந்தவர்கள் சுட்டிக் காட்டினர். அடடே! நான்தான் கொண்டுவந்தேன்; மறந்துவிட்டேன்' என்று கூறித் தலையணையை எடுத்து வைத் து க் .ெ கா ன் டா ர். இத்தகைய வேடிக்கை நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் எவ்வளவோ நடை பெற்றிருக்கின்றன. தமிழ் நெஞ்சம் பாவேந்தர் தமிழின் உருவமாகவே விளங்கினர் என்று சொன்னல் அது மிகையாகாது. தமிழ் என்ருல் அவருக்கு எவ்வளவு ஆசையோ ?

  • உடல் உயிர் செந்தமிழ் மூன்றும்

நான் நான் நான் ? என்று பாவேந்தர் பாடுகின்ருர். இவ்வடிகளால் தாம் வேறு, தமிழ் வேறு எனும் வேறுபாடேயின்றி, தமிழாகவே தம்மைக் கருதும் நெஞ்சம் நமக்குத் தெரிகிறது. ஏனெனில், உடலையும் உயிரையும் தமிழுக்கென்றே ஒப்படைத்துவிட்டார் பாவேந்தர்.