பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்குயில் பாரதிதாசன் 97 தது என்பதற்கு இஃது ஒரு சான்ருகும். இனி, இவரி டம் ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர் ஒருவர்க்குத் தமது நூலொன்றைக் காணிக்கையாக்கியுள்ளார். க. பிச்சையன் என்னும் பெயருடைய இளைஞர், பாவேந்தரிடம் ஈடுபாடு கொண்டு, அவர்க்கு வேண்டிய பணிகளை மனமுவந்து செய்துவந்தார்: பாவேந்தர் நூல்களை அழகிய முறையில் கட்டடம் (Bind) அமைத்துக் கொடுப்பார் பாவேந்தர்க்குத் தமது நூல்களை அழகாக அச்சிடுவதிலும் அழகாகக் கட்டடம் செய்வதிலும் பேரார்வம் உண்டு. அதல்ை பிச்சையனிடம் பாவேந்தர் அன்பு வைத்திருந்தார். பிச்சையன், இளமையிலேயே நோய்வாய்ப்பட்டு இறக்க நேர்ந்தது. பாவேந்தர் இரங்கினர் ; இளைஞர் எனப் பாராது, தம் நூலொன்றைப் பா வே ந் த ர் பிச்சையனுக்குக் காணிக்கையாக்கினர். பெரியவர் சிறியவர் என்று வேறுபாடு கருதாது, அன்பு ஒன்றையே கருதிப் பாவேந்தர் அதற்குக் கட்டுப்பட்டு விளங்கினர். மறதியுள்ளம் பாவலர்கள், எந்த நேர மு ம் நாட்டையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள்; வீட்டை மறந்து விடுவார்கள்; கற்பனை உலகில் திரிந்துகொண்டிருப் பார்கள்; இந்த உலகை மறந்துவிடுவார்கள்; சுருங்கக் கூறின் தம்மையே மறந்துவிடுவார்கள். தம்மை மறந்த நிலை, பாவேந்தர் வாழ்வில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. பாவேந்தர் ஒரு முறை ஒரு கல்லூரிக்குக் கவியரங்க நிகழ்ச்சிக்காக வந்திருந்