பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 וי .. | பாடுங் குயில்கள் நம்பிவிடுவார். யார் உண்மையானவர், யார் பொய்ம்மையானவர் என்பதே இவருக்குத் தெரி யாது. எளிதில் யாரையும் நம்பும் இயல்புடைய வராக இருந்தமையால், பொய்ம்மையானவரை யும் இவர் நம்பிவிடுவார். நம்பிவிட்டால், அவர் களை நம்ம பிள்ளை என்று உரிமையுடனே குறிப் பிடுவார். கவிஞர்கள் எப்பொழுதும் கற்பனை உலகில் பறந்துகொண்டேயிருப்பவர்கள். அதனல் இந்த உலக நடவடிக்கைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு காண்பது அரிது. பணிவுள்ளம் எல்லார்க்கும் நன்ரும் பணிதல் என்பது வள்ளுவர் வாய்மொழி. இவ் வாய்மொழியை நன்கு உணர்ந்தவர் பாவேந்தர். அதனால் எல்லா ரிடத்தும் பணிவு காட்டும் பண்பு இவரிடம் குடி கொண்டிருந்தது. தமக்கு வழிகாட்டியாக இருந்த பாரதியாரிடம் இவர் பெருமதிப்பு வைத்திருந்தார். இவர் பாரதியாரைச் சிறப்பித்துப் பாடும் இடத் தில், திங்களைக் கண்ணிலான் சிறப்பிப்பதுபோல நான் உன்னைச் சிறப்பிக்க வந்துளேன்’ என்னுங் கருத்தமையப் பாடியுளார். இப் ப கு தி யி ல் பாவேந்தருடைய பணிவுள்ளம் ஒளி வீசுகின்றது. நன்றியுள்ளம் இவர் தாம் இயற்றிய குடும்ப விளக்கு இரண் டாம் பகுதியை, நிறைதமிழாய்ந்த மறைமலையடி களுக்குக் காணிக்கையாக்கியிருக்கின்ருர் சான் ருேரை மதிக்கின்ற மனப்பான்மை இவரிடம் இருந்