பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 7 வேதநாயகர் மகிழ்ச்சியுடன் அப் பணியினை மேற்கொண்டார். நற்பண்புகளுக்கு உறைவிட மாக இவர் விளங்கிய காரணத்தால், அப் பணி மக்களுக்குப் பணியாற்ற ஒரு வாய்ப்பாகும் என்று கருதி, அதனைத் தொடர்ந்தார். அக் காலத்தில் ஆங்கிலேயர் நாடாண்டு வந்தமையால் சட்டங் களும் ஆணைகளும் ஆங்கில மொழியில் இருந்தன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டி யிருந்தது. மக்களுடைய குறைபாடுகள், வழக்குகள் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டி யிருந்தது. பத்திரங்கள், கடிதங்கள் முதலியவற்றுள் எதனையும் மறுநாளைக்கென ஒதுக்கி வைக்காமல் இவர் அன்ருடம் மொழிபெயர்த்துவிடுவார். மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலாக உயர்நீதி மன்றம் ஒன்று இருந்தது. அது சதர் கோர்ட்” என்று வழங்கப்பட்டது. இங்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளை வழக்குரைஞர் மாவட்ட நீதிமன்றங் களில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவர். இவை யனைத்தும் ஆங்கில மொழியில் இருக்கும். அன்றைய வழக்குரைஞர்களுள் பலர் தக்க ஆங்கிலப்புலமை பெருதவர்கள். இத் தீர்ப்புகள் தமிழில் இருந்தால் அனைவருக்கும் பயன்படுழே என்று வேதநாயகர் கருதினர்; கருதிய அளவில் நில்லாது செயலளவிலும் காட்டத் தொடங்கினர். இத் தொடக்கமே பின்னர் நூல்வடிவம் பெற்றது. அலுவல் நேரம் போக எஞ்சிய நேரத்தையெல்லாம் இவர் நூல்கள் படிப்பதும் பாடல்கள் இயற்றுவதுமாகப் பயன் படுத்திக்கொண்டார்.