பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாடுங் குயில்கள் கார்டன் துரையின் அலுவலகத்திலேயே வேத நாயகருக்கு வேலைகிடைத்தது. அலுவலகப் பத்திரங் கள், கணக்குப் புத்தகங்கள் இவற்றைக் காக்கும் s’ பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பெற்றது. வேத t" நாயகர் கடமையுணர்ச்சி மிக்கவர் ; ஆதலால். இளமையை வீணுக்காமல் சோம்பலின்றிப் பணி புரிந்து வந்தார். இவர் கூரிய மதி படைத்தவ ராதலின் பத்திரங்களையெல்லாம் செம்மையாகப் படித்து, அரசாங்க அலுவல், ஆட்சிமுறை முதலிய செய்திகளை நன்கு அறிந்துகொண்டார். இவர்தம் அயரா உழைப்பால் அனைவருடைய நல்லெண்ணத் தையும் பெற்ருர். இவ்வாருக இரண்டாண்டுகள் இவர் இப் பணியில் இருந்தார். ਾਂ கி. பி. 1850ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றத் திற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. இதனையறிந்த பலரும் விண்ணப் பித்தனர். வேதநாயகரும் விண்ணப்பம் விடுத்தார். அப்பொழுது மாவட்ட நீதிபதியாக இருந்தவர் மேஸ்தர் பாய்லர் துரை என்பவராவர். அவர் நடுநிலையாளர் ; விண்ணப்பித்த அனைவரையும் அழைத்தார். தமிழை ஆங்கிலத்திலும் ஆங்கிலத் தைத் தமிழிலும் மொழிபெயர்க்கப் பணித்தார். அனைவருடைய மொழிபெயர்ப்புகளையும் படித் தறிந்த அவர், வேதநாயகருடைய மொழி பெயர்ப்பே சிறந்து விளங்குகிறதென்று முடிவு செய்து, அம் மொழிபெயர்ப்பு வேலையை இவருக்கே தந்தார்.