பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்குயில் வேதநாயகர் 5 நிகழ்ச்சியைக் கண்டாலும் அந் நிகழ்ச்சி இவர்தம் உள்ளத்தில் கவிதை உணர்வைத் துண்டும். வேதநாயகரின் பெரிய தாயார்க்கு அடைக்கல சாமி என்ருெரு மகன் இருந்தார். அவர் ஒர் அலுவலை முன்னிட்டுத் திரிசிரபுரத்திற்கு வந்திருந்தார். அவர் வருகையை அறிந்த வேதநாயகர், சிறந்த கவிதை யொன்று பாடி அவரை வரவேற்ருர், அடைக்கல சாமியும் அகம் மிக மகிழ்ந்தார். மற்ருெரு சமயம் மைத்துன முறை பூண்ட ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றது. அத் திருமணத்திற்குச் சென்றிருந்த வேதநாயகர், பொருள் செறிந்த, நகைச்சுவை பொருந்திய பாடலொன்றைப் பாடி மணமக்களே வாழ்த்தினர். அப் பாடலின் நயத்தையும் நகைச் சுவையையும் அறிந்து அங்கிருந்தோர் வியந்து வேதநாயகரைப் பாராட்டினர். தம் மாணவரின் கவிதைத் திறனை அறிந்த தியாகப் பிள்ளை பெரு மகிழ்வு கொண்டார். இவ்வாறு இருபது வயதுவரை வேதநாயகர் திரிசிரபுரத்திலேயே தங்கிக் கல்வி கற்றுத் தேர்ச்சிபெற்ருர். ஆ. மொழிபெயர்ப்புப் பணி வேலை ஏற்பு கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் வேதநாயகர் ஏதேனும் அலுவல் புரிய விழைந்தார். அப்பொழுது திரிசிரபுரத்தில் இருந்த தென் மாநில நீதிமன்றத் தில் கார்டன் துரை என்பவர் நீதிபதியாக இருந் தார். ஆசிரியர் தியாகப் பிள்ளையின் முயற்சியால்