பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாடுங் குயில்கள் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திரிசிரபுரத்தில் தெற்கு மாநில நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட் டிருந்தது. அம் மன்றத்தைச் சார்ந்த அலுவலகம் ஒன்றில் தியாகப் பிள்ளை என்னும் பெரியார் ஒருவர் பணி புரிந்துவந்தார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர் என்பதையறிந்த சவரிமுத்துப் பிள்ளை அவரையணுகிச் செய்தியைத் தெரிவித்தார். வேதநாயகருடைய முகப் பொலிவைக் கண்ட தியாகப் பிள்ளை மனமுவந்து கற்பிக்க இசைந்தார். வேதநாயகர் கூரிய மதியுடையவராதலால், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் ஆழ்ந்து பயின்ருர் படிக்க வேண்டுமென்னும் ஆர்வம் இருந்தால் கல்விஎளிதாக வளரும். கல்வியில் ஆர்வம் மட்டும் இல்லையாளுல், ஆசிரியர் எவ்வளவு முயன்று புகட்டினலும் மாணவர் உள்ளத்தில் கல்வி படியாது. இவரோ கல்வியில் பேரார்வம் கொண்டவராதலால், எளிதாகவும் விரைவாகவும் இவருள்ளம் பாடங்களைப் பற்றிக்கொண்டது. ஆங்கிலத்தில் நன்கு பேசவும் எழுதவும் வேதநாயகர் கற்றுக்கொண்டார். இயல்பிலேயே தமிழ்மொழியில் பற்றும் பயிற்சியும் பெற்றிருந் தமையால் தமிழிலும் இவர் சிறப்புற்று விளங்கினர்; இலக்கண இலக்கியங்களில் தெளிந்த அறிவும் பெற்ருர். தியாகப் பிள்ளையிடம் பயிலும்பொழுதே கவிதை புனைவதில் இ வ. ரு ள்ள ம் நாட்டங் கொண்டது. அப்பொழுதே இவர் அழகிய கவிதைகளை இயற்றத் தொடங்கிவிட்டார். எந்த