பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாடுங் குயில்கள் அங்கே கூட்டம் மிகுதியாக இருந்தது. அனைவரும மகிழ்ச்சியுடன் விருந்துண்டு களிப்பில் மூழ்கியிருந் தனர். அப்பொழுது இவருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் பிரித்துப் பார்க்காமலே சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்; ஏனெனில், அது வருத்தம் தருஞ் செய்தியாக இருந்தால், மகிழ்ச்சியுடன் இருக்கும் அனைவரும் வருந்துவரே என்று கருதி அவ்வாறு செய்தார். அன்று மாலை வரை இவர் அதைத் தொடவேயில்லை; எல்லாரும் கல்ந்து சென்ற பிறகு அதைப் படித்துப் பார்த்தார். உண்மையில் அது வருத்தம் தருஞ் செய்தியாகவே இருந்தது. இவருடைய மருமகள் இறந்துவிட்ட தாகச் செய்தி வந்திருந்தது. கவிமணி, இத்தகைய உயரிய நல்லியல்புகளுக்கு உறைவிடமாக விளங்கி வந்தமையால், உயர்ந்த மனிதராக முடிந்தது. உ. மணிக்குயில் தேசிகவிநாயகம் தேசிகவிநாயகத்தின் கவி ம ன ம் தமிழ் நாடெங்கும் பரவியது. கவிமணத்தை நுகர்ந்து மகிழ்ந்த தமிழ் நெஞ்சங்கள் இவரைக் கண்டு மகிழவும், போற்றிப் பாராட்டவும் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் ஊருக்கு வருக, எங்கள் ஊருக்கு வருக என்று அழைப்பு வந்தவண்ண மாகவே இருந்தது. இவர்தாம் புகழை விரும்பாத புண்ணியராயிற்றே! இயலாது” என்று இவர் எழுதி