பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இசைக்குயில் வேதங்ாயகர் (கி. பி. 1826-1889) அ. இளமைப் பருவம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்குத் தாழ்வு நேராதவண்ணம், ஒவ்வொரு நூற்ருண்டிலும் பெருமக்கள் பலர் தோன்றி, அதனைக் காத்து வந்துள்ளனர். அவ்வகையில் பத்தொன்பதாம் நாற்ருண்டிலே வள்ளல் இராமலிங்க அடிகள், மகா வித்துவான் மீனட்சிசுந்தரம் பிள்ளை, பாளையங் கோட்டைக் கிருட்டினப் பிள்ளை, மாயூரம் வேத நாயகம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் போன்ற பெருமக்கள் தோன்றிப் பல்லாற்ருனும் தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளனர். இத் தமிழ்த் தொண்டர் களுள் வேதநாயகரின் விழுப்புகழை நாம் இங்கே காண்போம். பிறப்பு சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்ருே ரால் பாராட்டப்பெற்றது சோழ நாடு. அவ்வாறு புகழப்பெறுவதற்குக் காரணம், அந் நாட்டில் காவிரி யாறு பாய்வதனால்தான். என்றும் வற்ருமல் நீர் பாயும் தன்மை வாய்ந்தது அக் காவிரி. அது சங்கப் புலவர் பலராலும் பாராட்டப்பெ ற்றது; கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வாரால்