பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 57. மனத்தில் பதித்துக் கொண்டார்; தமிழ்ப் பாடல் களைத் தம் அமுதக் குரல்கொண்டு பாடிப் பழகினர். குலவித்தை கல்லாமல் பாகம்படுமன்ருே ஆதலின், தந்தையின் தமிழறிவு முந்தி வந்து பாரதியாரைச் சேர்ந்தது. தந்தையார் உரிய காலத்தில் பாரதி யாரைப் பள்ளியிற் சேர்த்தார். பாரதியார் பள்ளியில் தமிழில் தனிக் கருத்துச் செலுத்தினர். தேர்வுக் காலங்களில் தமிழில் முதல் மதிப்பெண்ணும், பிற பாடங்களில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களும் இவர் பெற்று, ஒவ்வோர் ஆண்டிலும் வெற்றி பெற்றுவந்தார். இச் செயல் ஆசிரியர் எல்லார்க்கும் வியப்பைத் தந்தது. தொடக்கக் கல்வி நிறைவெய்திய பின்னர்ப் பாரதியார் திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளி யிலே சேர்க்கப்பெற்ருர் கல்வியில் இவருடைய கருத்துான்றவில்லை. அக் கல்வி முறை இவரைக் கவரவில்லை. அதனைப் பற்றி இவரே பிற்காலத்தில் மனம் வெறுத்துப் பாடியுள்ளார்.

  • செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது

தீது எனக்குப்பல் லாயிரம் சேர்ந்தன; நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.' பாரதியார் இவ்வாறு அக்காலக் கல்வி முறை பற்றிக் கூறியுள்ளார். கி. பி. 1894 முதல் 1897 வரை இவர் அங்குப் பயின்ருர் ; ஐந்தாம் படிவம் வரை கல்வி கற்ருர். அந் நாளில் திருநெல்வேலியில் வாழ்ந்த தமிழறிஞர் பலரின் தொடர் பு பாரதியார்க்கு