பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:56 பாடுங் குயில்கள் சின்னசாமி ஐயர், உறவு முறையிலே இலக்குமி என்னும் நங்கையைத் திருமணம் செய்து கொண்டார். பெயருக்கேற்ற பேரழகுகொண்ட அவ்வம்மையார் அருங்குனங்கள் பலவும் ஒருங்கு பெற்றவர் ஆவார். அவர்கள் இருவரும் கருத்து ஒருமித்த இல்லறவாழ்க்கை நடத்தினர் ; அதன் பயனக ஆண்மகவு ஒன்றை ஈன்றனர். அறிவறிந்த அம் மகன் 11-12-1882 ஆம் ஆண்டு பிறந்தான். பெற்ருேர் மகனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டு மகிழ்ந்தாலும், அனைவரும் செல்லமாகச் சுப்பையா என்றே அழைத்தனர். சுப்பையாவே பிற்காலத்தில் பாடுங்குயில் சுப்பிரமணிய பாரதி иштDгта; ஆர்ை. அ. இளமை வாழ்வு கல்வி சுப்பையா குழலும் யாழும் நாண மமுலே மொழி பேசினன் ; சிறுகையை நீட்டிக் குறுகுறு நடந்தான், இட்டும் தொட்டும் கவ்வியும் துழிந்தும் நெய்யுடை உணவை மெய்பட விதிர்த்தும் தம் பெற்ருேரை மயக்கினன். காலம் கடந்தது : .சுப்பையாவுக்கு ஐந்தாம் ஆண்டு நடந்தது. அறிவும் அழகும் செறிந்த பாரதியார்க்கு அவர் தந்தையார் முதற்கண் எழுத்தறிவித்தார்; சிறுசிறு தமிழ்ச் செய்யுள் நூல்களையும் கற்றுக் கொடுத்தார் ; ஆங்கில எழுத்துகளையும் அறிமுகப் படுத்தினர். பாரதியாரும் தமிழ்ப் பாடங்களே