பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. விடுதலைக்குயில் பாரதியார் (கி. பி. 1882 - 1921) தோற்றுவாய் நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல் H இமைப்பொழுதும் சோரா திருத்தல் - எனக் கவிதையை உயிர்மூச்சாகக் கொண்டு, கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்கே உழைத்து, நொடிப்பொழுதும் சோர்வின்றி வாழ்ந்த வர் எவரேனும் உளரோ என்ருல், அவர்தாம் பாவலர் சி. சுப்பிரமணிய பாரதியார். பெற்றேர் தேன் இருக்கும் சோலை சூழ்கின்ற தென் இ ள ைச நகராகும் எட்டையபுரம். அங்குச் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து, எட்டையபுர அரண்மனையில் பணியாற்றி, அவைப் புலவராய் வீற்றிருந்து புகழ் பெற்றவர் சு. சின்னசாமி ஐயர் ஆவர். அவர், அன்னை மொழியாகிய தமிழை ஆய்ந்துணர்ந்தவர் ; தாமே முயன்று ஆங்கிலம் கற்றவர்; மேலைநாட்டுக் கணக்கியல் முறையிலும் ஒரளவு வல்லவர். அவரது நுண்ணறிவும் நாவன்மை யும் அவர்பால் அனைவரையும் அன்பு கொள்ளச் செய்தன. அதுபோலவே அவருடைய பெருங் குனமும், பரந்த மனமும் அவர்பால் அனைவருடைய நன்மதிப்பையும் நட்பையும் உரிமையாக்கின.