பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாடுங் குயில்கள் சார்பில் கவிமணிக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்புச் செய்தார். சொந்த ஊரில் சிறப்பு சொந்த ஊரில் யாருக்கும் அவ்வளவு புகழோ பெருமையோ இருப்பது அரிது. ஆல்ை, கவி மணிக்கு இவர் பிறந்த ஊரில் எல்லேயில்லாப் புகழ் இருந்தது. அவ்வூர் மக்கள் கூடிக் கவிமணியின் பெய ரால் ஒரு மண்டபம் எழுப்பினர் ; பெரும் பொருட் செலவில் கண்னேயும் கருத்தையும் கவரும்வண்ணம், கவிமணியின் வாழ்நாளிலேயே அதனேக் கட்டினர்: இவருடைய உளங்கனிந்த வாழ்த்தையும்பெற்றனர். நாகர்கோவில் நகரிலே பொதுமக்களின் நன் கொடையால் கவிமணி நிலையம் என்னும் ஒன் அழகிய மண்டபமும் அதன்பின் உருவாகியுள்ளது. குரல் ஒடுங்கியது தமிழகம் முழுமையும் தன் இனிய குரல் ஒலியைப் பரப்பிக்கொண்டிருந்த மணிக்குயில், கி. பி. 1954ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத் தாரும் நாள், தன் குரலைச் சிறிதுசிறிதாக ஒடுக்கிக் கொண்டது. கு ர லை ஒடுக்கிக்கொண்டாலும், பாடல்களிலே பதிவு செய்யப்பட்ட அந்தக் குரல், தென் பொதிகைத் தென்றலென நம் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது; நமது உள்ளங்களே உருக்கிக்கொண்டேயிருக்கிறது.