பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்குயில் தேசிகவிநாயகம் 53. திளைத்தார்; கேட்டோரையும் திளைக்கவைத்தார். தமிழறிஞர்கள் பாராட்டிப் பேசியபோது, கவிமணி நாணித் தலைகுனிந்தே வீற்றிருந்தார். கவிமணி தம் பாடலைக் குழந்தைகள் பாடி ஆடி நடித்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார் ; சிறப்புற நடித்த சிறுவன் ஒருவன ஆரத்தழுவிக்கொண்டார். கவிமணியின் நன்றியுரை பொன்னுடை போர்த்தப்பெற்ற கவிமணி எழுந்து நின்று, கண்கலங்க, மெய்ந்நடுங்க, சொல் தடுமாற, உணர்ச்சிவயமாகி, அன்பு பொங்கத் தமக்கே உரிய அடக்க உணர்வுடன் சில மொழிந் தார். அம் மொழிகளில்தான் எவ்வளவு அடக்கம்! எவ்வளவு பண்பு! எவ்வளவு உணர்ச்சி! யானேக்குப் போர்த்தவேண்டிய பொன்னடையை ஆட்டுக் குட்டிக்குப் போர்த்திவிட்டீர்கள். நான் இத்தகைய பாராட்டுகளுக்குத் தகுதியுடையவன ? எனினும் என் தமிழ்த்தாய்க்குச் செய்யப்பெற்ற சிறப்பு களாகவே இதனைக் கருதுகிறேன்’ என்று பண்பும் பணிவுந்தோன்ற மொழிந்தார். எழுபதாம் ஆண்டு விழா 1944ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர், நாகர்கோவிலில் கவிமணியின் எழுபதாம் ஆண்டு நிறைவு விழா மிக்க சிறப்புடன் நடை பெற்றது. இந்திய அரசில் அந் நாள் நிதியமைச்ச ராய் இருந்த ஆர். கே. சண்முகளுர் பெருமக்கள் பலருடன் நேரில் வந்து, கொங்கு நாட்டு மக்கள்