பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாடுங் குயில்கள் பாராட்டுகள் கவிமணியின் பாடல்களைத் தமிழ் நாட்டிற்கு முதன்முதல் அறிமுகஞ்செய்துவைத்த பெருமை, 'குமரன்” என்னும் இதழை நடத்தி வந்த தமிழறிஞர் சொ. முருகப்பனரையே சாரும். அவருடைய முயற்சியாலேயே ஆத்தங்குடியில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. பாராட்டென்ருல் கவி மணி ஒப்புக்கொள்வாரா? அதளுல் ரசிகமணி' டி. கே. சிதம்பரநாதரின் துணையால் இவரை அழைத்து வந்தனர். செட்டிநாட்டரசர் அண்ணு மலை வள்ளல் கவிமணியை வரவேற்று, மிகச் சிறந்த சொற்பொழி வாற்றிப் பொன்னுடை போர்த்திச் சிறப்புச்செய்தார். பழங்கால மன்னர்கள் தம் அரண்மனையில் புலவர்களுக்குச் சிறப்புச் செய்த காட்சிபோல் அந்தக் காட்சி விளங்கியது. செட்டி நாட்டரசர் பெருமிதத் தோற்றத்துடன் மேடையில் ஏறி நின்று, பொன்னடையை எடுத்து விரித்து, மகிழ்ச்சி பொங்க, அழகாக அமைதியாகப் புலவரை மதிக்கும் பொறுப்போடு கவிமணிக்குப் போர்த்திய காட்சியும், கண்ணிர் மல்கக் கைகுவித்துப் பணி வோடு தலைவனங்கி நின்று, கவிமணி அதனை ஏற்றுக்கொண்ட காட்சியும் கண்டு களித்தவர்க ளுடைய நெஞ்சங்களிலும் கண்களிலும் இன்றும் நின்று நிலவுகின்றன. பாராட்டென்ருல் அஃதன்ருே பாராட்டு! கவிமணி பாடிய ஒரே ஒரு வெண்பாவைப்பற்றி 'ரசிகமணி நெடுநேரம் பேசினர்; பொருள் கூருமல், திரும்பத்திரும்ப அதனைப் பாடி இன்பத்தில்