பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 5) செல்லம்மாள் என்னும் நற்குன நங்கையை மன முடித்தார். இத் திருமணம் கி. பி. 1897இல் நடந்தது. நற்பண்புகள் நிரம்பிய அவ்வம்மையார் பாரதியாரின் இயல்புக்கு ஏற்ப நடந்து குடும்ப வாழ்வுக்குப் பெருமை சேர்த்தார். தந்தையார் மறைவு பாரதியாரின் தந்தையார் ஒரு பஞ்சாலை நடத்தி வந்தார். பஞ்சாலை பெரும் இழப்புக்கு உள்ளாகியது. இழப்பைத் தாங்காமல் உள்ளம் உடைந்த சின்னசாமி ஐயர் நோயுற்ருர். அந் நோயே அவருக்கு இறுதியாயிற்று. கி. பி. 1898ஆம் ஆண்டு சின்னசாமி ஐயர் தம் அருமை மகனையும் உறவினர்களேயும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டு இயற்கையொடு கலந்தார். காசி வாழ்க்கை பாரதியாரின் அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருட்டின சிவன் என்பவரும் பாரதியாரின் தத்தை இறந்த செய்தி கேட்டு எட்டையபுரம் வந்திருந்தனர். அவர்கள் பாரதியாரைக் காசிக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். காசிக் கல்லூரி ஒன்றில் பாரதியார் சேர்க்கப் பெற்ருர். அங்கே இவர் வடமொழியும் இந்தியும் பயின்ருர்; தேர்வில் வெற்றியும் பெற்ருர். எனினும், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்பதில் இவர் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசவைக் கவிஞர் எட்டையபுர மன்னர், டில்லியில் நடைபெற்ற அரசாங்க விழாவிற்குச் சென்றவர், காசிக்கும்