பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாடுங் குயில்கள் சென்று பாரதியாரைக் கண்டார் ; தம்முடன் எட்டையபுரத்துக்கு வருமாறு அழைத்தார். பாரதி யாரும் உடன்பட்டு எட்டையபுரம் வந்து சேர்ந் தார். மன்னரின் எண்ணத்திற்கிணங்கப் பாரதியார் அரசவைக் கவிஞரானர். ஒருநாள் காலையில் அண்ணுமலை ரெட்டியாரைப் பற்றிய பேச்செழுந்தது. அவர் கழுகுமலை முருகன் மீது பழகுதமிழில் அழகொழுகக் காவடிச் சிந்து பாடியவர். இந்தக் காவடிச் சிந்து பொது மக்களும் பாடத்தக்க எளிமை பொருந்தியது. பாரதியார் பாடல்களோ புலவர்களுக்கே விருப்ப மூட்டுபவை: ரெட்டியாரின் பாடல்களோ பொது மக்களைக் கவர வல்லவை. இவைபோன்ற பாடல்களைப் பாரதி யாரால் பாட இயலாது என்று அங்கிருந்தோர் கூறினர். மன்னரும் அவையோர் கருத்தையே வழிமொழிந்தார். இதைக் கேட்ட பாரதியார் சிரித்தார். இன்றே காவடிச் சிந்து பாடி வருவேன்' என்று கூறி அங்கிருந்து சென்ருர். பாரதியார் அன்று மாலை அரண்மனைக்குச் சென்ருர், அவைப் புலவர்கள் அங்கில்லே அவர் களுக்கு ஆள் அனுப்பப் பெற்றது : வந்து கூடினர். பாரதியார் சிந்து பாடினர். பச்சைத் திருமயில் வீரன் அலங்காரன் கெளமாரன்-ஒளிர் பன்னிரு திண்புயப் பாரன்-அடி பணிசுப்பிர மணியர்க்கருள் அணிமிக்குயர் தமிழைத் தரு பத்தர்க் கெளியசிங் காரன்-எழில் பண்ணும் அருசைலத் துாரன்..."