பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 61 இப் பாடலைக் கேட்ட அரசரும் புலவர்களும் அண்ணுமலை ரெட்டியாரோ பொது மக்கட்கு மட்டுமே பாடினர். பாரதியாரோ பொது மக்கட்கும் புலவர்கட்கும் பாடும் திறம் வாய்ந்தவர் என்பதை ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். ஆ. சென்னை வாழ்வு இதழாசிரியர் தருமம் மிகு சென்னை மாநகரம் வருக எனப் பாரதியாரை வரவேற்றது. சென்னையிலிருந்து அந் நாளில் செய்திகளைத் தாங்கிவந்த நாளிதழ் சுதேசமித்திரன் என்பதாகும். பாரதியார்பால் பரிவு கொண்ட அவ்விதழின் ஆசிரியர் தமது நாளிதழின் துணையாசிரியராக இவரை அமர்த்திக் கொண்டார். பெருமையான பதவி ; வருவாய் குறைந்த பணி. எனினும், அப் பணியை மனநிறை வுடன் ஏற்றுக்கொண்டார் பாரதியார். தேசிய இயக்கப் பணி நாட்டின் இழிநிலையை உணர்ந்தார் பாரதி யார் : அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற்கொண்ட மக்களுக்கு உணர்ச்சியூட்டக் கருதினர்; அதற்கேற்ற கருவியாகச் சுதேச மித்திரன் நாளிதழைப் பயன்படுத்தினர். - எளிய சொற்கள்; எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்; பொதுமக்கள் விரும்பும் மெட்டு -ஆகியவற்றைக் கொண்டன பா. கு.-5