பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாடுங் குயில்கள் வாகவே இருந்தன. இவருடைய பாடல்கள். சொல்லுக்கு மெருகேற்றிப் படிப்போரின் நரம்புக்கு முறுக்கேற்றி உணர்ச்சியூட்டும் இவர் கவிதைகள் மக்களைக் கிளர்ச்சி கொள்ளச் செய்தன. நாட்டு விடுதலை பற்றிய கவிதைகளில் தீப்பொறி பறந்தது; படிப்போரின் மனத்தில் எழுச்சி பிறந்தது. கோழை வீரனைன்; முதியவன் இளைஞனைன். தமிழில் ஒரு மறுமலர்ச்சி தோன்றிற்று ; தமிழர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்ச்சி உண்டாயிற்று. விடுதலை வேட்கையில் மக்களை வீறுகொள்ளச் செய்யும் பாரதியாரின் கவிதைகளைத் தம் நாளேட் டில் வெளியிடுவதற்கு அதன் ஆசிரியர் கலக்க மடைந்தார் ; ஆங்கிலேயரின் பார்வை தமக்குத் தீங்கை விளைவிக்குமோ! என அஞ்சினர்; கவிதை களின் உணர்ச்சிக் கடுமையைச் சற்றே தணிக்குமாறு வேண்டினர். அவருடைய வேண்டுகோள் பாரதி யாரைச் சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்து வெளியேறத் துாண்டியது. உடலுக்குச் சிறையிடலாம்; உள்ளத்திற்குச் சிறையிட முடியுமா? எண்ணத்திற்குச் சிறையிட்ட இதழைவிட்டு விலகிய பாரதியாரைத் திருமலாக் சாரியார் என்பார் எதிர்கொண்டு அழைத்துக் கொண்டார். அவர் பாரதியாரின் நண்பர்; நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர்; பாரதியாரை நாட்டு விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தார். இருவரும் கலந்துரையாடி இந்தியா என்னும் இதழைத் தொடங்கினர். பாரதியாரே