பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் (). அதன் ஆசிரியர். கி. பி. 1908இல் அவ்விதழ் தொடங்கப் பெற்றது. சுதேசமித்திரன் தவழ்ந்த கைகளிலெல்லாம் இந்தியா வீற்றிருந்தது. கவிதைகள் வெளியீடு வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக் கால் மக்கள்தம் உள்ளத்தைக் கொள்ளைகொண் டார் பாரதியார். அக் கவிதைகள் எல்லாம் நாட்டு மக்களின் கைகளில் எக் காலத்திலும் இருந்திட வேண்டுமென இவருடைய நண்பர்கள் விரும்பினர்; அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அம் முயற்சி கைகூடிற்று. கி. பி. 1908இல் சுதேச-கீதங்கள் : என்னும் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதைத் தொகுதியின் முதற் பகுதி வெளியாயிற்று. செம்மல் சிதம்பரளுர் சந்திப்பு - ஒட்டப்பிடாரம் பெற் .ெ ற டு த் த சிங்கம், செம்மல் சிதம்பரனர் தூத்துக்குடியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் கையிலும் இந்தியா' கொலுவீற்றிருந்தது. அவர் வீர சு. த ந் தி ர ம் வேண்டி நிற்பவரானர். அந் நாளில் பாரதியாரும் சிதம்பரனரும் ஒருவரையொருவர் நேரில் கண்ட தில்லை. ஆனால், இருவரும் ஒருவர்மீது ஒருவர் உள்ளத்தால் நட்புக்கொண்டிருந்தனர். செ ம் ம ல் சிதம்பரனர் வழக்கொன்றின் பொருட்டுச் சென்னை செல்ல நேர்ந்தது. சிதம் பரஞர் தம் அலுவல்களை முடித்துக்கொண்டு பாரதியாரைக் காணவேண்டும் என்னும் பேராவ லொடு இந்தியா அலுவலகத்துக்குச் சென்ருர்.