பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாடுங் குயில்கள் திருமலாச்சாரியார்தாம் முதலில் தென்பட்டார். சிதம்பரனர் அவரிடம் தாம் பாரதியாரைக் காண வந்திருப்பதாகக் கூறினர். அவரோ மாடியை நோக்கி உரக்கக் கூவிப் பாரதியாரை அழைத்துத் துரத்துக்குடியிலிருந்து ஒருவர் உங்களைக் காண வந்துள்ளார் என்று தெரிவித்தார். சி த ம் பர னார் மாடிக்குச் சென்ருர், ஒளி படைத்த கண்கள் : உறுதி கொண்ட நெஞ்சம் ; முறுக்கிவிட்ட மீசை முண்டாகக் கட்டு-இவை யனைத்தும் கொண்ட பாரதியாரை அடையாளம் கண்டுகொண்ட சிதம்பரனர் பாரதியாருக்கு வணக்கம் தெரிவித்தார். யாரென அவர் வினவு முன் சிதம்பரனர் ஒட்டப்பிடாரம்...எனத் தொடங் கினர். அந் நொடியே பாரதியார் ஒ! உலகநாதப் பிள்ளை குமாரர் சிதம்பரமா ! எனக் கூறி, அவரைக் கட்டித் தழுவினர். இருவரும் பல மணி நேரம் கலந்துரையாடினர். பின்னர்ச் சிதம்பரனர் தம் ஊர் திரும்பினர். விடுதலைக் கிளர்ச்சி - செம்மல் சிதம்பரனர் இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையே கப்பல் ஒட்டி ஆங்கிலேயர்க்குப் போட்டியாக வாணிகம் நடத்தினர். அதனைத் தடுக்க முயன்ற ஆங்கிலேயர் தோல்வியே கண்டனர். அந் நேரத்தில் விடுதலைக் கிளர்ச்சி மேலோங்கியது. லா லா லஜபதிராய் மீது குற்றஞ் சாட்டிய ஆங்கில அரசு அவரை நாடு கடத்தியது. இதல்ை இந்திய மக்கள் கொதித்தெழுந்தனர். ஆயினும் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.