பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 65 இச் சமயத்தைப் பயன்படுத்திச் செ ம் ம ல் சிதம்பரனரையும், சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கில அரசு சிறைசெய்தது; விசாரணை செய்வது போல் பாசாங்குசெய்து, இறுதியில் சிதம்பரனர்க்கு இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்தது. விடுதலை வீரர் சிதம்பரளுர் வெங்கொடுமைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் சந்திப்பு இச் செய்தி சென்னையில் வாழ்ந்த பாரதியார் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினுற்போலப் பாய்ந்தது. பாரதியார் சென்னையிலிருந்து சிட் டெனப் பறந்து வந்தார் ; சிதம்பரனரைச் சிறைக் கம்பிகளுக்கிடையே கண்டு மனம் நொந்தார் : அவரைக் கட்டித் தழுவினர்; கண்ணிர் உகுத்தார். சிதம்பரனரோ அஞ்ச வேண்டா என்றும், நாட் டுனர்ச்சியைப் பாட்டுணர்ச்சியால் எழுப்புமாறும், இனிச் சென்னையில் இருப்பது தீங்கை விளைவிக்கும் என்றும், எந்த வழியிலும் சிறை புகாமல் இருக்க வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார். ஆங்கில அரசின் அடக்குமுறைக் கரங்கள் தொட முடியாத இடம் பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரி யாகும். அங்குப் பாரதியார் செல்லவேண்டும் என்றும், அங்கிருந்துகொண்டே ஆங்கில் ஆட்சியை அடியோடு அகற்றும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் சிதம்பரனர் நெஞ்சம் நெகிழ்ந்து கூறினர். விழிகளிலே நீரருவி பாயப் பாரதியார் சிறைச் சாலையை விட்டு வெளியே வந்தார்.