பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாடுங் குயில்கள் இந்தியா தடுக்கப்பட்டது பாரதியார் சென்னை மீண்டதும் இந்தியா புதிய வீறுடன் வெளிவரத் தொடங்கியது. ஆங்கில எதிர்ப்பு முழக்கங்கள் எல்லாப் பக்கத்திலும் எதிரொலித்தன. ஆங்கில ஆட்சியின் அடக்கு முறைகள் அம்பலப்படுத்தப்பட்டன. கொடுங் கோல் ஆட்சியின் கொடுமைகள் அடுக்கடுக்காக எடுத்து விவரிக்கப்பட்டன. மேலோர்கள் வெஞ் சிறையில் வீழ்ந்துகிடப்பதையும், நூலோர்கள் செக் கடியில் நொந்து கிடப்பதையும் பாரோர் உணரப் பாரதியார் எழுதினர் திக்கெட்டும் மக்கள் சினந்தெழ வேண்டிய இன்றியமையாமையை எடுத் தியம்பினர். ஆங்கில ஆட்சி அதனைக் கண்டு அஞ்சியது; மக்களின் விழிப்புணர்ச்சி கண்டு கலங்கியது. ஆங்கி லேயரின் சீற்றக்கண இந்தியா'மீது பாய்ந்தது. அவ்விதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் சிறைசெய்யப்பட்டார். அவ்விதழும் தடை செய்யப் பட்டது. பாரதியாரைச் சிறைசெய்யவும் ஆனபிறப் பித்தது ஆங்கில அரசு. உடனே நண்பர்கள் பலரும் நாட்டுத் தலைவர் சிலரும் பாரதியாரைப் புதுச் சேரிக்குச் செல்லுமாறு வற்புறுத்தினர். சிறையில் சிதம்பரளுர் கூறியதும் பாரதியார் நினைவுக்கு வரவே, அவர் நண்பர்களின் வேண்டுகோளின்படி புதுச்சேரிக்குப் பயணமாளுர்.