பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 67 இ. புதுவை வாழ்வு புதுவை நகர் புதுச்சேரி என்பதனைப் புதுவை என்றும் சுருக்க மாக அழைப்பர். அந்நாளில் புதுச் சேரியை ஆண்டு கொண்டிருந்தவர்கள் பிரஞ்சுக்காரர்கள். புதுச்சேரி வாழ் மக்கள் அனைவரும் தமிழர்களே. அவர் பேசும் மொழியும் தமிழே. ஆனால், அங்குப் பிரஞ்சுக் காரர் ஆட்சி நடைபெற்று வந்ததனுல் ஆட்சி மொழியாகப் பிரஞ்சு மொழியும் இருந்தது. ஆங்கி லேயரின் அதிகாரம் புதுவைக்குள் புக முடியாது. பிரஞ்சு அரசின் இசைவு இல்லாமல் ஆங்கிலேயர் புதுவைக்குள் எதுவும் செய்யமுடியாது. அது போலவே ஆங்கிலேயரின் ஆட்சிப் பகுதியில் பிரஞ்சு ஆணை செல்லாது. அதனை உணர்ந்த சிலர் ஆங்கில, ஆட்சியின் கொடுமைக்கு ஆளாகாமல் புதுவையைப் புகலிடமாகக் கொண்டனர். குவளைக் கண்னன் உதவி பாரதியார் புதுவைக்குப் போனவரல்லர். எங்குப் போய்த் தங்குவது? யாரைக் காண்பது? என்றெல்லாம் பாரதியார் எண்ணித் தயங்கிஞர். அந் நேரத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களையக் குவளைக் கண்ணன் என்பார் முன்வந்தார். அவர் தம் உறவினர் குப்புசாமி ஐயங்கார் முகவரிக்குக் கடிதம் எழுதிப் பாரதியா ரிடம் தந்தார்; உறவினர் வீட்டிலேயே தங்குமாறு சொல்லி விடுத்தார். ஆங்கில அரசின் ஆணை எந் நேரத்தில் பாரதியார் மீது பாயுமோ என்ற நிலையில்