பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6S பாடுங் குயில்கள் தக்க ஏற்பாட்டுடன் குவளைக் கண்ணனும் நண்பர் சிலரும் பாரதியாரைப் புதுவைக்கு அனுப்பி வைத் தனர். மாற்றுருக் கொண்ட பாரதியார் மறுநாள் காலையில் புதுவையை அடைந்தார்; குப்புசாமி ஐயங்காரின் வீட்டைக் கண்டுபிடித்துக் குவளைக் கண்ணன் கொடுத்த கடிதத்தை அவரிடம் கொடுத் தார். குப்புசாமி ஐயங்காரும் உடன்பட்டுப் பாரதி யாரைத் தம் வீட்டில் தங்கவைத்துக் கொண்டார். புதுவையில் இந்தியா? இந்தியா' இதழின் உரிமையாளர் திருமலாக் சாரியார் சென்னையில் சிறைசெய்யப்பட்டார் அன்ருே ? எத்தகைய குற்றமும் அவர் செய்யவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. விடுதலை பெற்ற திருமலாச்சாரியார் சென்னையில் தங்க விருப்பமின்றிப் புதுவைக்கே வந்து சேர்ந்தார்; பாரதியாரைப் பார்த்தார். இந்தியா இதழை மீண்டும் தொடங்குவதென இருவரும் முடிவு செய்தனர். சென்னையில் இருந்த அச்சுப் பொறிகள் புதுவை வந்து சேர்ந்தன. கி. பி. 1909இல் மீண்டும் இந்தியா வெளிவரலாயிற்று. புதுவையிலிருந்தே தமிழகம் முழுவதற்கும் அவ் விதழ் அனுப்பப் பெற்றது. தடை விதிக்கப் பெற்ற *இந்தியா தமிழ் மக்களின் கைகளிலே மீண்டும் தவழ்ந்தது; வாடிய பயிர்க்கு வான் மழை போலத் தளர்வுற்ற தமிழர்க்குப் புத்துயிர் கொடுத்தது. இருவர் தொடர்பு செக்கிழுத்த செம்மல் சிதம்பரனரையும், தமிழ்மொழிக் காவலராம் நாவலர் ச. சோம