பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 69 சுந்தர பாரதியாரையும், பாட்டுக்கொரு புலவன் பாரதியாரையும் ஈன்றெடுத்துப் புகழ்கொண்ட திருநெல்வேலி மாவட்டம் வ. வெ. சுப்பிரமணிய ஐயர் எனும் வீரப் பெருமகளுராலும் சிறப்புப் பெற்றது. தாய் நாட்டன்பில் தலைசிறந்த அவரை அரசியலுலகம் வ.வெ.சு. ஐயர் என்றே அழைத்தது. 'பாரிஸ்டர்’ பட்டம் பெற அவர் இலண்டனில் படித்துக் கொண்டிருந்தார் ; அங்கிருந்தபடியே இந்தியாவில் ஆங்கில அரசு நடத்தும் அடக்குமுறை களேக் கூர்ந்து கவனித்துவந்தார் ; இந்தியத் தாய் நாட்டில் மக்கள் படும் இன்னல்களை எண்ணிப் பார்த்தார். நெஞ்சம் பொறுக்கவில்லை. அவர் இங்கிலாந்தில் இருந்துகொண்டே அந் நாட்டுக்கு எதிராகத் தம் எதிர்ப்புக் கருத்துகளை எடுத்து முழக்கினர். ஆங்கில அரசு இவற்றையெல்லாம் பார்த்து வாளாவிருக்குமோ ? அவரைச் சிறை செய்யக் காலங்கருதிக் காத்திருந்தது. உடனே, வ. வெ. சு. ஐயர் மாறுவேடம் பூண்டார் ; கடலில் குதித்தார் ; கலங்காது நீந்தினர்; உடல் களைத் தாலும் உள்ளம் சலியாமல் பிரஞ்சுக் கடற் கரையை அடைந்தார்; அங்கிருந்து அல்லல் பல வற்றுக்கு ஆளாகித் தாய்த் திருநாடாம் இந்தியா வந்துசேர்ந்தார். ஆங்கில அரசினர் இங்கிலாந்தி லிருந்து அவர் தப்பிவிட்ட செய்தியை இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துவிட்டனர். இந்திய அரசாங்க ஒற்றர் அவரைத் தேடத் தொடங் கினர். இந்தியாவில் ஆங்கிலப் பகுதியில் இருப்பது தமக்குத் திங்கு என்பதை உணர்ந்த வ. வெ. சு. ஐயர்