பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7|| பாடுங் குயில்கள் அரவிந்தரும், பாரதியாரும் அடைக்கலம் புகுந்த புதுவைக்கே வந்து சேர்ந்தார். நாட்டு விடுதலைக்கு மூவரும் இணைந்து தொண்டாற்றினர். அம் மூவரும் கூடிச் செயல்புரிவதை ஆங்கில அரசு ஒற்றர்கள் வாயிலாக அறிந்துகொண்டது. காமா லேக் கண்னனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் தானே அம் மூவரும் புதுவையில் இருந்துகொண்டே தங்கள் அரசுக்கு எதிராகச் சதிவேலையில் ஈடு படடுள்ளனர் என்று ஆங்கில அரசினர் நம்பினர் , அச் சதி வேலையும் இந்தியா' இதழ் வாயிலாகவே பரப்பப்படுவதாகவும் நம்பினர் ஆகவே, தங்கள் ஆட்சி எல்லேக்குடபட்ட பகுதிகளில் அவ்விதழுக்கு த் தடை விதித்தனர். அவ்விதழை விற்போரையும் படிப்போரையும் ஒறுப்பதாக அச்சுறுத்தினர். ஆயினும் மறைமுகமாக அவ்விதழ் மக்களால் ஆதரிக்கப்பெற்றது. 'இந்தியா நின்றது பாரதியார், அரவிந்த ர், வ. வெ. சு. ஐயர் ஆகிய அம் மூவர் புகழும் இணைந்து பரவியது. அம்மூவரின் கூட்டு தம் அரசுக்கு வேட்டு என்பதை எண்ணிய ஆங்கிலேயர் பு து ைவ ஆளுநரை அ னு கி ன ர் ; ஆளுநரைக் கொண்டு அவர்களே அங்கிருந்து அகற்றிவிட முயன்றனர்; எந்த முறை யிலாவது அந்த மூவரையும் புதுவை எல்லையை விட்டு நீக்கி, ஆங்கில ஆட்சி எல்லைக்குக் கடத்திச் சென்று சிறைசெய்யக் கருதினர். ஆளுல், அதற்கான திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்