பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 71 போல் ஆயிற்று. அம் மூவருக்கும் மலைபோல வந்த துன்பம் பணிபோல விலகிற்று. தோல்வி கண்ட ஆங்கிலேயர் தொடர்ந்து துன்பம் இழைக்கத் துணிந்தனர். ஆங்கிலக் காவல் துறையினர், பிரஞ்சு அஞ்சல்துறை அலுவலகங்களை அணுகினர். புதுவை அஞ்சல் நிலைய அலுவலர்களைத் தம்வயப் படுத்திக்கொண்டு வெளியூர் செல்ல அஞ்சலகத்துக்கு வரும் இ ந் தி யா இதழ்களைக் கைப்பற்றி அழித்தனர்; பாரதியாருக்கு வரும் பண விடைத் தாள்களைத் தடைசெய்தனர். இன்னும் செய்யத்தகாத இன்னல் என்னென்ன உண்டோ அனைத்தும் செய்தனர். இவ்வாறு மறைமுகமாக நடந்த இழிசெயல்களைப் பாரதியார் அறியார். இத்தகைய இக்கட்டான சூழலில் இ ந் தி யா TTTTTTT TTT SMMMSJMMS MMMS MA MM புரட்சிக் குரல் கொடுக்கும் குயிலாகப் பொலிந் . தவர் பாரதிதாசனர். அவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பது. பாரதியார் புதுவையில் வாழ்ந்துவந்த போதிலும் இருவருக்கும் அறிமுகம் ஏற்படவில்லை. ஆயினும், பாரதியார் பாடல் களைப் பாரதிதாசனர் படித்து மகிழ்வதோடு தம் நண்பர்களுக்கும் பாடிக்காட்டுவார். பாரதியாரைப் பாராமலேயே அவர்மீது பற்று வைத்திருந்தார் பாரதிதாசன். புதுவையில் நடந்த ஒரு திருமணத்திற்குப் பாரதியார் தம் நண்பர்களுடன் சென்றிருந்தார் பாரதிதாசனரும் அத் திருமண வீட்டிற்கு வந்திருந்