பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாடுங் குயில்கள் தார். திருமணம் இனது முடிந்தது. நண்பர் சிலர் கூடினர்; கனக சுப்புரத்தினத்தைப் பாடுமாறு வேண்டினர். அவரும் மிகுந்த விருப்பத்தோடு, வெண்கலக் குரலில் பாடினர். வீரசுதந்திரம் வேண்டி நின்ருர் பின்னர் வேருென்று கொள்வாரோ?-என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ? கனக சுப்புரத்தினத்தின் குரல் கனிர் என்று திருமண வீட்டில் எதிரொலித்தது. பாரதியார் தம் பாடலே ஒருவர் உணர்ச்சி பொங்கப் பாடுவதைக் கேட்டுத் தம்மை மறந்தார். பாடி முடித்ததும் பாரதியார் அங்கு வந்திருப்பதை நண்பர் சிலர் கனக சுப்புரத்தினத்தின் காதில் மொழிந்தனர். உடனே அவர் பாரதியாரிடம் சென்று வணங்கி நின்ருர் பாரதியார் அவர் பாடிய திறத்தைப் பாராட்டினர். அன்று கொண்ட தொடர்பு இறுதிவரை உறுதி யாக நின்றது. கனக சுப்புரத்தினம் அன்று முதல் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார். புதுவையில் பாரதியார் இருந்த வரையில் பாரதிதாசனர் இவரைக் கண்மணிபோலக் காத்துவந்தார். வறுமையால் பாரதியார் வாடிய போதெல்லாம் உரிமையோடு பாரதிதாசனர் உதவிசெய்தார். ஆங்கில அரசின் புலனுய்வு தமிழ்நாட்டில் விடுதலைத்தி வீறிட்டெழுந்தது. வாஞ்சி என்னும் விடுதலை வீரர் மணியாச்சிப்