பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 73 புகைவண்டி நிலையத்தில் திட்டமிட்டபடி மாவடட. ஆட்சித் தலைவர் (கலெக்டர்) ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தாமும் சுட்டுக்கொண்டு இறந்தார். கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டது. அக் கொலைக்கு உடந்தையானவர்களுள் இருவர் புதுவைக்குப் போய்விட்டதாகக் காவல்துறையின ருக்குச் செய்தி கிடைத்தது. பிரஞ்சு அரசைச் சென்னைக் காவல்துறையினர் நாடினர் ; புதுவை அரசின் உயர் அதிகாரிகள் இருவர் துணையுடன் புலனாய்வில் இறங்கினர். மறு நாள் புதுவை நீதிமன்றத்தில் புலய்ைவு செய்த புதுவை அதிகாரியின் குறிப்புகள் ஆய்வு செய்யப் பட்டன. அதன் பின்னர் அரவிந்தர், பாரதியார், வ. வெ. சு. ஐயர் ஆகிய மூவரும் பெரிய இலக்கிய மேதைகள் என்றும், இவர்களுக்கும் ஆஷ் துரை கொலைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்புச் செய்தது. அம் முடிவைப் புதுவை அரசு சென்னை அர்சுக்குத் தெரிவித்துவிட்டது. . புகழ் பரவியது புதுவையில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே பாரதியார் கி. பி. 1909இல் ஜன்மபூமி என்னும் பெயரில் தம் சுதேச கீதங்களை நூலாக்கி வெளியிட் டார். அடுத்து நாட்டுப் பாட்டு என்னும் பெயரில் பாரதியார் கவிதைகளை முதற் பதிப்பாகப் பரலி. சு. நெல்லையப்பர் வெளியிட்டார். அவர் பாரதியாரின் நண்பர்; பாரதியாரின் கவிதைகளை