பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பாடுங் குயில்கள் நூல் வடிவில் கொணர அரும் பாடுபட்டவர். கி. பி. 1917இல் பாரதியாரின் கண்ணன் பாட்டு : நூலை வெளியிட்டவர் அவரே. கவிதை வெளியீடு களால் பாரதியாரின் புகழ் எங்கும் பரவியது. அந் நாளில் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், வாழும் மிகப் பெரிய கவிஞர் என்னும் தலைப்பில் பாரதியாரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். இதல்ை ஆங்கில நாட்டிலும் இவர் புகழ் பரவியது. புதுவையிலிருந்து புறப்பாடு புகழ்கொண்ட பாரதியார் புதுவையில் ஏறக் குறையப் பதினேராண்டுகள் வாழ்ந்துவிட்டார். புதுவை வாழ்வு இவருக்குக் கசந்துவிட்டது; பாடித் திரியும் அந்த விடுதலைக்குயில் புதுவை என்னும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க விரும்பவில்லை. இவர் இவ் எண்ணத்தைத் தம் நண்பர்களிடம் கூறினர். நண்பர்கள் பதறிப் போனர்கள்; புதுவையிலேயே வாழுமாறு இவரை வற்புறுத் தினர்கள். பாரதியார் தம் முடிவை மாற்றிக் கொள்ளாமல் தம் குடும்பத்துடன் புதுவை நகரை விட்டுப் புறப்பட்டார். சுற்றியிருந்த நண்பர்கள் விழியில் நீரொழுக விடை கொடுத்தனுப்பி வைததாாக ள. ஈ. இறுதி வாழ்வு சிறைசெய்யப்படல் புதுவையிலிருந்து பாரதியார் தம் குடும்பத் துடன் புறப்படும் செய்தி, சென்னைக் காவல் துறை