பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 75 யினர்க்குத் தெரிந்தது. அப்பொழுதுதான் அவர் களுக்கு ஊக்கம் பிறந்தது; பாரதியாரைச் சிறை செய்யக் காத்திருந்தனர். புதுவை எல்லேயைக் கடந்து, ஆங்கில ஆட்சிக்குட்பட்ட கடலூரில் பாரதியார் கால் வைத்ததும் காவலர் இவரைச் சிறைசெய்தனர். பாரதியாரின் மனைவியாரும், குழந்தைகளும் பதறினர்; அழுதனர். காவலர் பாரதியாரைக் கடலூர்ச் சிறையில் வைத்தனர். விடுதலை பாரதியார் கடலூரில் சிறைசெய்யப்பட்ட செய்தி சென்னைக்கும் சென்றது; துரத்துக்குடிக்கும் சென்றது. நாவலர் பாரதியார் சென்னைக்கு விரைந்தார்; ஆங்கில அதிகாரிகள் சிலரைக் கண் டார்; பாரதியாரின் விடுதலைக்கு முயன்ருர். அதே பொழுதில் அப்பொழுது 'சுதேசமித்திரன் ஆசிரிய ராகப் பணியாற்றிய அரங்கசாமி ஐயங்கார் கடலூர்க்கு விரைந்து, தமக்குத் தெரிந்த வழக் கறிஞர் சிலரை யழைத்துக்கொண்டு, கடலூர் அறமன்றத் தலைவரிடம் சென்று பாரதியாரை விடுதலை செய்யுமாறு வேண்டினர். அறமன்றத் தலைவரோ சென்னைக் காவல்துறையினரை அணுகு மாறு கூறினர். அரங்கசாமி ஐயங்கார் சென்னைக்கு விரைந்து சென்ருர். அதற்குள் நாவலரின் முயற்சி பலன் தந்தது. அரங்கசாமி ஐயங்கார் காவல் துறைத் தலைமை அதிகாரியை அணுகிப் பாரதியார் உடல்நலக் குறைவுடையவர் என்றும், உடனடி யாகச் சென்னைச் சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும்