பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பாடுங் குயில்கள் என்றும் வேண்டினர். இறுதியில் நாவலரின் முயற்சி யாலும், அரங்கசாமி ஐயங்காரின் முயற்சியாலும், காவல்துறைத் தலைமை அதிகாரி கானிங்டன் துரையின் நல்லெண்ணத்தாலும் சிறைசெய்யப் பட்ட இருபத்துநான்காம் நாள் பாரதியார் விடுதலைபெற்ருர், கடையத்தில் பாரதியார் பாரதியார் கடலூர்ச் சிறையிலிருந்து விடுதலை யானதும், நேராகத் தம் மனைவி பிறந்த ஊராகிய கடையம் சென்ருர் பாரதியாரால் அங்கு இரு நாள்கள்கூட இருக்க இயலவில்லை. இவருடைய பழக்கவழக்கங்களும் போக்கும் இவர்தம் உறவினர் களுக்குப் பிடிக்காமையே இதற்குக் காரணம். எட்டயபுரத்தில் பாரதியார் பின்னர்ப் பாரதியார் தம் குடும்பத்தை அழைத்துக்கொண்டு தம்மூராகிய எட்டயபுரம் சேர்ந்தார். அங்குக் கையிலிருந்த பொருளைக் கொண்டு வாழ்ந்து வரலார்ை. அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பிவைப்பார். அங்கிருந்தும் சிறிது பணம் வரும். இவ்வாறு எட்டயபுரத்தில் சிறிது காலமே அவரால் வாழ முடிந்தது. வறுமையும் அவர் வாழ்வில் வளர்ந்தது. உடல்நலமும் குறையத் தொடங்கியது. மீண்டும் சென்னை வாழ்வு இந் நிலையில் ஒருநாள் சென்னைச் சுதேசமித் திரன் அலுவலகத்திலிருந்து அஞ்சல் ஒன்று வந்தது.