பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக்குயில் பாரதியார் 77 அவ்விதழின் துணையாசிரியர் பொறுப்பைப் பாரதி யார் ஏற்றுக்கொள்ளுமாறு அவ்வஞ்சலில் தெரி விக்கப்பட்டிருந்தது பாரதியார் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள இசைந்து நண்பர்களிடமும், மற்ற வர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு தம் குடும்பத் தினருடன் சென்னையில் குடிபுகுந்தார்: ' சுதேச மித்திரன்' துணையாசிரியர் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றிவந்தார். யா?ன தந்த துயரம் சென்னையில் பாரதியார் வாழ்ந்துவந்த பகுதி திருவல்லிக்கேணியாகும். அங்குள்ள பார்த்தசாரதி கோவிலுக்குப் பாரதியார் சென்று வருத்ல் வழக்கம். அங்குள்ள யானைக்குப் பழமும், தேங்காய் முடியும் கொடுப்பதைப் பாரதியார் வ ழ க் க ம ா க க் கொண்டிருந்தார். யானை அதனை வாங்கியுண்ணும். பாரதியார் அதனைக் கண்டு மகிழ்வார். கொத்தித் திரியும் கோழி, எத்தித் திருடும் காக்கை, பாலைப் பொழிந்து தரும் பக, வாலைக் குழைத்து வரும் நாய்-போன்ற உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாடியவரல்லரோ பாரதியார் அவர் யானையினிடம் அன்பு காட்டியதில் வியப்பேது? ஒருநாள் அவ் யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதனைப் பாரதியார் அறியார்; வழக்கம் போல் தேங்காய், பழம் கொடுத்தார். யானை அவற்றை வாங்கிக் கொள்ளாமல் அவரையே துரக்கி எறிந்தது. துாக்கி எறியப்பட்ட பாரதியார் யானேயின் கால்களுக்கு இடையே வீழ்ந்தார். பா. கு.-6