பக்கம்:பாடுங் குயில்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7S பாடுங் குயில்கள் வீழ்ந்தவரை யானை அடையாளம் கண்டு கொண்டது போலும் ; க ண் ணி ர் வடித்தது : ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது. வீழ்ந்த பாரதியார் மயக்கமுற்ருர். அருகிருந்தோர் யாரும் அவர்பால் நெருங்கவில்லை. எப்பொழுதும் பாரதியார்க்கு உதவும் குவளைக் கண்ணன் அப்பொழுது அங்கே ஓடிவந்தார் , துணிவுடன் யானையின் கால்களுக்கிடையே புகுந்து ஒரு குழந்தையைத் து.ாக்கி வருவதுபோலப் பாரதி யாரைத் துாக்கி வந்தார். மருத்துவ உதவிக்குப் பின் பாரதியார் ஒரளவு குணமானர். பாரதியார் சிறிது குணமடைந்தாலும் துரக்கி எறியப்பட்டு வீழ்ந்த அதிர்ச்சியினல் அவர்க்கு வயிற்றுக் கடுப்பு நோய் வந்துற்றது. மருத்துவம் பார்த்தும் பயனில்லை. 11-9-1921 இல் பாரதியார் உயிர் நீத்தார். தனது ஆற்றலும் இனிமையும் நிறைந்த குரலால் விடுதலைப் பண்ணிசைத்த வீரக்குயில் இம் மண்ணைவிட்டே விடுதலை பெற்றுவிட்டது. குயிலின் குரல் ஒடுங்கிவிட்டாலும் அக் குரலிலிருந்து எழுந்த பாடல்களின் கருத்து ஒன்ருய், இரண்டாய், நூருய் வளர்ந்து மக்கள் உண்மையான விடுதலை பெறத் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை.