பக்கம்:பாடு பாப்பா.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பாடு பாப்பா.pdf
விளக்கு நல்ல விளக்கு
        வெளிச்சம் தரும் விளக்கு
வீட்டை அழ காக்கும்
        வெண்கலப் பொன் விளக்கு!

இருட்டு கின்ற நேரம்
        எழுந்து விளக் கேற்றிக்
குருட்டுத் தனம் போகக்
        குந்திப் பாடம் படிப்போம்!

விளக்கு நல்ல விளக்கு
        வெளிச்சம் தரும் விளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடு_பாப்பா.pdf/7&oldid=1010899" இருந்து மீள்விக்கப்பட்டது