உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. புதிய நடை

(நேரிசைக் கலிவெண்பா)

கத்து கடலுடுத்த தென்னகத்தில் கற்றோன்றிப்
புத்தம் புதிய மணல்தோன்றி-நித்தநித்தம்

புல்லெழுந்த குட்டைப் புழுத்தோன்றிப் புட்டோன்றி
வல்விலங்கு தோன்றி மனித இனம்-அல்லும்

பகலும் அழகுவான் செங்கதிரும் பன்மை
இகலும் குடிமுறையும் இன்சொல்- நகைமுகத்து

மக்களும் தோன்றி மகிழ்ச்சித் திருக்கூத்துச்
சொற்களுந்தோன் றத்தமிழ் தோன்றியதே!-அக்காலம்

பொற்கால மாகிப் புதுமை வழிவகுத்து
நற்கால மாஞ்சங்க காலத்தில்-கற்பிளந்த

மாமணிகள் என்னுஞ்சீர் வற்றா இலக்கியத்தை
நாமணக்கப் பாடிவைத்தார் நற்புலவரி!-பாமணக்கும்

அந்நாள் இலக்கியங்கள் ஆற்றங் கரைமரம்போல்
முன்னாள் முரிந்து முளைத்திருக்கப்-பின்னாளில்

கற்றோர் ஒருசிலரே கைப்பொருள் இல்லாதான்
பெற்ற பெரும்பொருள் போல் பேரின்பம்-உற்றார்கள்!

பின்னுஞ் சிலபேர் பெரியோர் வழிநடந்து
சின்ன இலக்கியங்கள் செய்தார்கள்-அன்னோர்கள்

பிள்ளைத் தமிழென்றால் பிள்ளைத் தமிழெழுதி
வள்ளலுக்கும் மன்னவர்க்கும் தூதெழுதிப்-பள்ளத்துச்

செக்காட்டு வாரிபோலச் செந்தமிழில் பாட்டிசைத்தார்!

அக்காலம் வந்தார் அமரகவி-பொக்கைவாய்த்